நிலவுல வட சுட்ட கத கேட்டுருக்கோம்! இது என்ன புதுசா இருக்கு

May 14, 2024 - 12:29
 5
நிலவுல வட சுட்ட கத கேட்டுருக்கோம்! இது என்ன புதுசா இருக்கு

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா அங்கு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

நிலா சம்பந்தமான பல்வேறு கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் தற்போது நிலாவில் ரயில்களை இயக்குவது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Runa railway flot என்று சொல்லப்படுகிற இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் மேம்பட்ட போக்குவரத்தை உருவாக்க நாசா முடிவு செய்துள்ளது. ஆனால் பூமியில் உள்ளது போல தண்டவாளங்களோ எலக்ட்ரிக் வயர்களோ அல்லாமல் காந்த ஈர்ப்பு மூலம் 3 அடுக்கு கொண்ட flim track ல் செல்லும் ரெயிலை இயக்க நாசா திட்டமிட்டுள்ளது. இப்படி செய்யும் கருவியை float roboக்கள் என நாசா வகைப்படுத்தியுள்ளது. இந்த ரோபோக்களில் சக்கரங்கள், அல்லது தடங்கள் ஏதும் இருக்காது.இதனால் இவை ஊர்ந்தோ அல்லது நகர்ந்தோ செல்லாமல் மிதந்து செல்லும் என சொல்லப்படுகிறது. இந்த flot robo செல்வதற்கான track நிலவின் மேற்பரப்பில் நேரடியாக விரிவடைந்து இருக்கும் எனவும் நாசா தரப்பில் கூறப்படுகிறது. மேலும் flot roboக்கள் வினாடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் பல்வேறு வடிவில் உள்ள சுமைகளை கொண்டு செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும். அதோடு, அளவிற்கு ஏற்ப flot resain ரோபோக்களின் திறன் மாறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இதற்கான திட்டங்கள் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் துணை நிலை ரோபோக்கள் ட்ராக்குகள் உள்ளிட்டவற்றை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக நாசா கூறியுள்ளது.

அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலவு ஆராய்ச்சியில் இந்த வகையான ரோபோட்டிக் போக்குவரத்து மிக அத்தியாவசியமானதாக மாறிவிடும் என்பது நாசாவின் கருத்தாக உள்ளது.