குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கனும்னா…. பங்குனி உத்திரம் வழிபாடு ரொம்ப அவசியம்!

மன அமைதி, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்

Mar 24, 2026 - 17:04
Mar 24, 2026 - 17:11
 6
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கனும்னா…. பங்குனி உத்திரம் வழிபாடு ரொம்ப அவசியம்!
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கனும்னா…. பங்குனி உத்திரம் வழிபாடு ரொம்ப அவசியம்!

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கனும்னா…. பங்குனி உத்திரம் வழிபாடு ரொம்ப அவசியம்!  

2026-ஆம் ஆண்டின் பங்குனி உத்திரம், ஏப்ரல் 1, புதன்கிழமை (பங்குனி 18) கொண்டாடப்படுகிறது. உத்திரம் நட்சத்திரம் மார்ச் 31 மாலை 03:20 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 1 மாலை 04:17 மணி வரை நீடிக்கிறது.

பங்குனி உத்திரம் என்றால் என்ன?

பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் நாளில் கொண்டாடப்படும் மிகப் புனிதமான திருநாள். இந்த நாள் திருமண மற்றும் தெய்வீக இணைப்புகளுக்காக சிறப்பாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் பல தெய்வங்களின் திவ்ய கல்யாணம் நடந்ததாக நம்பப்படுகிறது.

முருகன் – தேவயானை திருமணம்

சிவன் – பார்வதி கல்யாணம்

ராமர் – சீதா திருமணம்

இதனால் இந்த நாள் திருமண வாழ்விற்கான ஆசீர்வாதம் கிடைக்கும் நாள் என்று நம்பப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். 

பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்கள். முருகன் கோவில்களில் பால்குடம், காவடி எடுத்துச் செல்வது வழக்கம்

சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்நடைபெறும்.

முக்கிய ஸ்தலங்கள்:

இந்த நாளில் சில கோவில்கள் மிகவும் பிரபலமானவை,

திருச்செந்தூர் முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

திருப்பரங்குன்றம்

இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.

இந்த நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும், தம்பதியர் உறவு வலுப்படும், மன அமைதி, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்

 

ஒரு முக்கிய திருநாள்:

பங்குனி உத்திரம் என்பது அன்பு, இணைப்பு, ஆன்மீகம் ஆகியவற்றை கொண்டாடும் ஒரு முக்கிய திருநாள். இந்த நாளில் வழிபட்டால் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சமாதானம் நிலைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.