இவ்வளவு நன்மைகள் இருக்கும் கோரைக்கிழங்கை பற்றி தெரியுமா?
கோரைக்கிழங்கில் கோடி நன்மை..
இவ்வளவு நன்மைகள் இருக்கும் கோரைக்கிழங்கை பற்றி தெரியுமா?
கோரைக்கிழங்கில் கோடி நன்மை..
மருத்துவத்திலும், அழகு சாதன பொருட்களிலும் முக்கிய பங்காற்றுவது இந்த கோரைக்கிழங்கு. இந்திய மருத்துவத்தில் தவிர்க்க முடியாத ஒரு தாவரமாக விளங்குகிறது.
கோரைக்கிழங்கு என்பதை விட நமக்கு கோரை என்றால் தான் தெரியும். வயல் மற்றும் வரப்புகளில் கோரையை நாம் பார்த்திருப்போம். அதனுடைய கிழங்கு தான் கோரைக்கிழங்கு என கூறப்படுகிறது.
கசப்பு சுவையுடைய இந்த கிழங்கை பச்சையாகவும் காயவைத்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம். இதன் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
கடுமையான காய்ச்சலையும் கோரைக்கிழங்கு சுலபமாக குணப்படுத்தும். குறிப்பாக மலேரியாவை விரைவில் குணப்படுத்தக்கூடியது.
எதற்கெல்லாம் கோரைகிழங்கை பயன்படுத்தலாம்?
- மூட்டுவலி, உடல்வலி, குழந்தைகளுக்கு வயிற்று வலி, அஜீரண கோளாறு, மாதவிடாய் பிரச்சனை, சரும பாதுகாப்பு, கர்பப்பை புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு கோரைக்கிழங்கு மற்றும் அதன் பொடி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- கோரைக்கிழங்கு பொடியை கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தனம் இதனுடன் கலந்து முகத்தில் தொடர்ந்து பூசி வர முக சுருக்கம், முகப்பரு இல்லாமல் போகும், சரும அலர்ஜி உள்ளவர்கள் குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.
- கோரைக்கிழங்கு பொடியை தேன் கலந்து சுண்டைக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை, கர்பப்பை பிரச்சனை, வெள்ளைப்படுதல், குழந்தைகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளை குணமாக்கும்.
- மூட்டு வலி உள்ளவர்கள் மற்றும் பலவீனமான குழந்தைகள் கோரைக்கிழங்கு பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்தோ, அல்லது பாலில் கலந்து குடித்தால் உடல் வலி இல்லாமலும், குழந்தைகளுக்கு வயிற்று பிரச்சனைகள் நீங்கி பசியை தூண்டும்.
- குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை தருவதோடு, உடல் வலிமையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும்.