அயோத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட ராமநவமி

ராம நவமி என்பது சித்திரை மாதம் கொண்டாடப்படும் மிக முக்கியமான விசேஷங்களில் ஒன்று ஆகும். இது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், ஏழாவது அவதாரமான  ஸ்ரீ ராமர் அவதரித்த தினத்தையே ராமநவமி என்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழா சித்திரை  மாதத்தில் கொண்டாடப்படும்

Apr 20, 2024 - 17:02
Sep 9, 2024 - 16:21
 26
அயோத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட ராமநவமி

அயோத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட ராமநவமி

ராம நவமி என்பது சித்திரை மாதம் கொண்டாடப்படும் மிக முக்கியமான விசேஷங்களில் ஒன்று ஆகும். இது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், ஏழாவது அவதாரமான  ஸ்ரீ ராமர் அவதரித்த தினத்தையே ராமநவமி என்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழா சித்திரை  மாதத்தில் கொண்டாடப்படும். பங்குனி மாதத்திலும் வரும். அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.

ராம நவமி எப்படி கொண்டாடப்படுகிறது ?

இந்நாளில் விரதம் இருந்து, ராமரை குறித்த பாடல்களை கேட்பதும் படிப்பதும் நன்மை தரும் அது மட்டுமின்றி, ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 108 முறை சொன்னால் அல்லது எழுதினால் ராமரின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம். அதுபோல இந்தாண்டு ராமநவமி அன்று ரவி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தில் சூரியனின் தாக்கம் இருப்பதால், நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் நீங்க மனதார வழிபட வேண்டும். ஸ்ரீ ராம நவமி என்று பெரும்பாலான வீடுகளில்  நீர்மோர், பானகம் , ஊறவைத்த பாசிப்பருப்பு ஆகியவை நெய்வேத்தியமாக செய்யப்படும். இந்த ராமநவமி விரதம் இருப்பவர்கள் காலையில் பூஜை செய்து இந்த உணவுகளை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இந்த ஸ்ரீ ராம நவமி என்று செய்யப்படும் உணவுகள் அனைத்தும் கோடை காலத்தில் உடம்பை குளிர்ச்சியாக்கும் உணவுகளாகவே இருக்கும்.

ராம் லல்லாவின் முதல் ராம நவமி!

இந்த சிறப்பான ஸ்ரீ ராமநவமியை ராமர் அவதரித்த இடமான அயோத்தியில் தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் இந்த ஆண்டு முதல் முறையாக ராமநவமி விழா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது. ராம நவமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'சூர்ய திலகம்' என்ற வான நிகராம நவமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'சூர்ய திலகம்' என்ற வான நிகழ்வு நடத்தப்பட்டது, சில நிமிடங்களுக்கு பகவான் ராம் லல்லாவின் நெற்றியில் ஒளியேற்றப்பட்டது. விழாக்களை தடையின்றி நடத்துவதற்கு மாநில அரசு விரிவான ஏற்பாடுகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

ராம நவமிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ராம நவமியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார், மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அங்கு முதன்முறையாக திருவிழா கொண்டாடப்படுவதால் அயோத்தி ஒப்பிடமுடியாத மகிழ்ச்சியில் இருப்பதாக கூறினார். "அயோத்தியில் ராம பிரான் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல், பல நூற்றாண்டுகளின் பக்தி நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள்" என்று அவருடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.