விளக்குத் திரிகள் மற்றும் அதன் பயன்கள்

ஆன்மீக ரீதியாக கொண்டாடப்படும் விளக்கேற்றுதலில் பலவகையான பயன்களும் ,வகைகளும் அமைந்துள்ளது!

May 17, 2024 - 01:03
Oct 15, 2024 - 22:26
 611
விளக்குத் திரிகள் மற்றும் அதன் பயன்கள்

விளக்குத் திரிகள் மற்றும் அதன் பயன்கள் 

தீபதிருநாளாக தொன்றுதொட்டு தமிழா்களால் ஆண்மீக ரீதியாக கொண்டாடப்படும் ஓரு முக்கிய நிகழ்வு விளக்கேற்றுதல். நாம் அன்றாடம் வீடுகளிலும், கோயிலுக்கு சென்றாலும் விளக்கேற்றுதல் ஒரு தெய்வீக தருணம். அப்படி தெய்வீக காரியங்களுக்காக நாம் ஏற்றும் விளக்கின் திரிகள் பஞ்சுத்திரி, வெள்ளை துணி திரி, மஞ்சள் துணி திரி, சிவப்பு துணி திரி, வாழைத் தண்டு திரி, தாமரை தண்டு திரி என ஒவ்வோறு திரிக்கும் கிடைக்கும் பலன்கள் ஆன்மிக ரீதியாக ...

பஞ்சுத்திரியின் பயன்கள்

வீடுகளில் பஞ்சுத்திரியால் விளக்கேற்றும் போது... நீண்ட நாளாக  சண்டை சச்சரவாக இருந்து வந்த வீடுகளில் பகை உணா்வு நீங்கி வீட்டில் உள்ளவா்களிடம் ஒற்றுமையை வலுப்படுத்தி,  குடும்பத்தில் அன்பும் சமரசமும் ஏற்பட்டு அமைதியான சூழ்நிலையில் நம் இல்லம்  மங்களகரமாய் சுபிட்சமாக மாறும்.

வெள்ளை துணி திரியின் பயன்கள்

வெள்ளை துணி திரியில் விளக்கேற்றும்போது நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரியானதாக இருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்,  அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதோடு, சமாதானமும் மனநிறைவும் ஏற்படும்.

மஞ்சள் துணி திரியின் பயன்கள்

மஞ்சள் துணி திரியால் தீபம் ஏற்றும்போது, எத்தனை துன்பங்கள் வந்தாலும் சமாளிக்கும் மன தைரியமும், பினி பிடைகள் நீங்கி அம்பாளின் பரிபுரண கருணையும் அருளும் கிடைத்திடும்.

சிகப்பு துணி திரியின் பயன்கள்

சிவப்பு துணி திரியை கொண்டு விளக்கேற்றும் போது தடைபெற்ற திருமணங்கள், செவ்வாய் தோஷம், நீங்கி முருகப்பெருமானின் அருளால் பலவருடம் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட்டு உங்கள்   செல்வாக்கு உயரும்.

வாழைத்தண்டு திரியின் பயன்கள்

வாழைத் தண்டு திரியில் விளக்கேற்றி மனதார பரத்திப்பவா்களுக்கு குலதெய்வம் கோவம் தனிந்து புத்திர பாக்கியத்தை உண்டாகும். முன்னோர்களின் சாபம் நீங்கும், துஷ்ட சக்திகள் நெருங்காமல் , வாழ்வில் சிறப்புமிக்க பலன்களை அளித்தரும்.  

தாமரை தண்டு திரியின் பயன்கள்

தாமரை தண்டு திரியால் விளக்கேற்றும் போது வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் பெருக்கி, அடைக்க முடியாத கடன்களை அடைத்து, இழந்ததை மீட்டெடுக்க முடியும். முன்னோர்களின் ஆசிா்வாதம் முழுமையாக பெற்று வாழ்வில் சகல சவ்பாக்கியங்களை அள்ளி தரும்.

அவரவா் வேண்டுதலுக்கு ஏற்றவாறு நாம் பாா்த்த திரிகளை தோ்வுசெய்து, அதிகாலை சுமாா் 4.15 முதல் 4.30மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி மனதார வேண்டிணாலே உங்கள் இலத்திலும் உள்ளத்திலும் தெய்வீக மணம் கமழும்... வாழ்வு முழுமை அடையும்.............
 
ஆன்மீகம் தழைத்திட ..... என்றென்றும் பக்தி பரவசத்துடன் .... 
சேனல் பைவ் பக்தியுடன் இணைந்திடுங்கள்.