இந்திய வீரர்களுக்கு மோடி வாழ்த்து!

Jul 6, 2024 - 01:52
Sep 9, 2024 - 23:08
 41
இந்திய வீரர்களுக்கு மோடி வாழ்த்து!

பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

33வது ஒலிம்பிக் திருவிழாவானது பிரான்ஸ் தலைநகர் பேரிசில் நடைபெற உள்ளது. ஜூலை 26ம் தேதி தொடங்கும் இந்த விளையாட்டு விழா ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது..

இதில் இந்தியா சார்பில் 102 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு தான் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா நடைபெற்றது. இதில், இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதையே நோக்க்கமாக வைத்து இந்திய அணி விளையாடி வந்தது. இந்த நிலையில், பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.