இமானுவேல் சேகரன் வரலாறு! Immanuvel Sekaran History Tamil

Sep 12, 2024 - 01:45
 74
இமானுவேல் சேகரன் வரலாறு! Immanuvel Sekaran History Tamil

இமானுவேல் சேகரன் வரலாறு! 

இம்மானுவேல் சேகரன் என்ற பெயரை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர் சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய ஒரு தலைவர் ஆவார். மேலும் அவரது இளம் வயதிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அவர்  வெள்ளையனே  வெளியேறு  இயக்கத்தில் இணைந்து மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். 

இம்மானுவேல் சேகரன் பிறப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூரில் அக்டோபர் 9ம் தேதி 1924 ஆம் ஆண்டு பிறந்தார். மேலும் அடக்குமுறைக்குட்பட்ட சமூகத்தில் பிறந்ததால் சிறுவயதிலிருந்தே இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது கடுமையான கோபத்திலும், சாதிய  ஒடுக்கு முறையை அழிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும் இருந்தார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்த இமானுவேல் சேகரன்!

தனது இளம் வயதிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய இமானுவேல் சேகரன், பின் வெள்ளையனே வெளியேற இயக்கத்தில் இணைந்து மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் ராணுவத்தில் இணைந்து அவரது சேவையை தொடங்கினார்.

ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்!

ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இமானுவேல் சேகரன், இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்குமுறையை கண்டு தனது ராணுவ வேலையை துறந்தார். பின் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இப்படி சாதிய ஒடுக்கு முறைக்காக அயராது போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன்.

இம்மானுவேல் சேகரன் இறப்பு!

1957ஆம் ஆண்டு முதுகுளத்தூர் இடைத்தேர்தலுக்கு பின்னர் இருசமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படுகிறது. இதில் 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்னையை தீர்க்க இராமநாதபுரம் ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரன் கலந்து கொண்டார். இதனை முடித்துவிட்டு மறுநாள் இரவு அவர் வீடு திரும்பும் பொழுது 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. மேலும் இரு தரப்பினரும் மோதி கொண்டதால் 85 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி இம்மானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினத்தை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குரு பூஜையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.