விமானங்களின் மாமன்னன் ''AN-225 - ம்ரியா'' Antonov An-225

Sep 28, 2024 - 23:25
 37
விமானங்களின் மாமன்னன் ''AN-225 - ம்ரியா'' Antonov An-225

விமானங்களின் மாமன்னன் ''AN-225 - ம்ரியா''

அன்டோனோவ் AN-225 ம்ரியா விமானம், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாகும். இது Antonov Design Bureau வால் வடிவமைக்கப்பட்டது. இந்த விமானம் முதன்முதலில் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.   ம்ரியா என்றால், உக்ரைனிய மொழியில் “கனவு” என்று பொருள், அதன் பெயருக்கு ஏற்ப உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த விமானமாக உலகம் முழுவதும் பயணித்த பெருமையும் இந்த விமானத்திற்க்கு உண்டு.

இதன் பிரமாண்டமான வடிவம் 

ம்ரியா விமானம் 640 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய, உலகின் மிகப்பிரமாண்டமான விமானமாகும். இது 84 மீட்டர் நீளமும், 88.4 மீட்டர் இறக்கை பரப்பளவும் கொண்டது. இந்த விமானம் 6 டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. ம்ரியா விமானம் முதலில் புரான் விண்கலம் மற்றும் எர்னிகியா ராக்கெட் போன்ற பெரிய பொருட்களை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டது. பின்னர், இது உலகம் முழுவதும் பெரிய மற்றும் கனமான சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது. ம்ரியா விமானம் 130 டன் எடையுள்ள ஜெனரேட்டர்கள், காற்றாலை பாகங்கள், டீசல் ரயில்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றது. கோவிட்-19 காலத்தில், ம்ரியா விமானம் கோவிட் தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உலகம் முழுவதும் தடுப்பூசிகளை விரைவாக மற்றும் பாதுகாப்பாக விநியோகிக்க, ம்ரியா விமானம் முக்கிய பங்கு வகித்தது.

ரஷ்யா - உக்ரைன் போர் 

ஆனால், 2022 ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போரின் போது, ம்ரியா விமானம் அழிக்கப்பட்டது. இந்த செய்தி உலகம் முழுவதும் விமானவியல் ஆர்வலர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. ம்ரியா விமானம் அதன் பெரிய அளவாலும், தனித்துவத்தாலும் உலகம் முழுவதும் பிரபலமானது. ம்ரியா விமானம் உலகின் மிகப்பெரிய விமானமாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய இறக்கை பரப்பளவையும் கொண்டது.இன்று, ம்ரியா விமானம் இருந்திருந்தால், அது பல முக்கியமான சூழல்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.