கார்த்திக்குடன் இணைந்த அரவிந்த் சாமி!

May 26, 2024 - 02:59
 8

ஜோதிகா சூர்யாவோட தயாரிப்புல, 96 பட இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கத்துல கார்த்திக் நடிப்புல ஒரு படம் வெளியாக போகுதுன்னு தகவல் வெளியானுச்சு. யாருமே எதிர்பார்க்காத சமயத்துல நேத்து அந்த படத்தோட 2 போஸ்டர் வெளியாகி இருக்கு. இந்த படத்துக்கு மெய்யழகன் அப்டின்னு பேர் வச்சுருக்காங்க. இந்த படத்துல கார்த்தியோட இணஞ்சு அரவிந்த் சாமியும் நடிக்க இருக்காரு. பொதுவா ப்ரேம்குமாரோட படங்கள் எல்லாமே feel good ஆ இருக்கும் அப்டிங்குறதால இந்த படமும் அந்த மாதிரியான ஒரு பானியில தான் இருக்கும் அப்டின்னு தெரியுது. தஞ்சாவூர் பகுதிய மையமா வச்சு இந்த படம் எடுத்துருக்காங்க. இந்த படம் பீரியட் ப்ளிம் ஆ இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இந்த படத்தோட 2வது போஸ்டர்ல ஒரு காள மாடும் கார்த்தியும் இருக்க மாதிரி இருக்கு. இதுக்கு முன்னாடி கார்த்தி நடிச்சிருந்த அதிகபட்ச படங்களும் மண் வாசம் கலந்து இருக்கும். அதே மாதிரி இந்த படமும் பெரிய அளவுல கொண்டாடப்படும்னு எதிர்பார்க்கப்படுது.