சிம்புவின் 50 ஆவது படமாக மாறும் STR48 ! 

Aug 1, 2024 - 00:47
 12
சிம்புவின் 50 ஆவது படமாக மாறும் STR48 ! 

சிம்புவின் 50 ஆவது படமாக மாறும் STR48 ! 

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவருடைய 48வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசன் உடைய ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது பட்ஜெட் காரணமாக அந்த படத்தில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் STR 48 படத்தை சிம்பு உடைய 50வது படமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் சிம்பு உடைய 49வது படத்தை மலையாள படமான "2018" படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தை ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு தான் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு அவருடைய 50வது படத்தை தொடர்வார் என கூறப்படுகிறது.