போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது! தமிழக அரசுக்கு கண்டனம்!

Jun 6, 2024 - 20:39
Sep 9, 2024 - 23:56
 42
போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது! தமிழக அரசுக்கு கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஊராட்சிகளை புதுக்கோட்டை நகராட்சியோடு இணைத்து மாநகராட்சியாக அறிவித்த தமிழக அரசை கண்டித்தும் 11 ஊராட்சிகளை புதுக்கோட்டை மாநகராட்சியோடு  இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் 8 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக  தரம் உயர்த்தியதோடு 11 ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்து  தமிழக அரசு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்நிலையில் மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை சேர்க்கக்கூடாது என் 11 ஊராட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் சொத்து வரி, தண்ணீர் வரி வீட்டு வரி ஆகியவை உயரும் அபாயம் உள்ளது எனவே மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

இருப்பினும் தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மாநகராட்சி கூட்டமைப்போடு இணைந்து புதுக்கோட்டை பகுதிகளில் இன்று 8  இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அதே போன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதேபோன்று மீதமுள்ள ஏழு இடங்களிலும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.