தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரி!
திருப்பத்தூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமது அளித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் கானுமாறு மே6ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2வது கட்டமாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.