இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன சீமான்! Seeman Meets Ilayaraja

இளையராஜாவை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

Mar 6, 2025 - 11:35
 5
இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன சீமான்! Seeman Meets Ilayaraja

இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன சீமான்! Seeman Meets Ilayaraja 

இசைஞானி இளையராஜா அவர்கள், இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 8ம் தேதியன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதனால் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது நா. த. க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளையராஜா அவர்களின்  இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து அவருடைய  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது,  தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தன் இசையால் நீக்கமற நிறைந்திருக்கும் இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்கள், மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கும் இனிய திருநாளாகும் எனவும் ,  
இவ்வரலாற்றுப் பெருநிகழ்வு சிறப்புற நடந்தேற என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், உலக அரங்கில் தமிழ்ப்பேரினத்திற்குப் பெருமை சேர்க்கவிருக்கும் இசை இறைவனின் இசைத் திருவிழாவில் உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெறுக என வாழ்த்துகிறேன் என்றும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.