கட்சியிலிருந்து நீக்கிய துரைமுருகன்…விளாசிய அண்ணாமலை!

Jul 30, 2024 - 23:48
 7
கட்சியிலிருந்து நீக்கிய துரைமுருகன்…விளாசிய அண்ணாமலை!

சென்னையில் இருந்து இலங்கை வழியாக ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று திமுக நிர்வாகி இப்ராஹிம் உள்பட 3 பேரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்

 இந்நிலையில் தான் தற்போது இப்ராஹிமை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

பைசூல் ரஹ்மானிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரனை மேற்கொண்டனர். அப்போது சில முக்கிய தகவல்களை பெற்ற அதிகாரிகள் மேலும் மன்சூர், இப்ராஹிம் ஆகிய 2 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கைதானவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திமுக நிர்வாகியான இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இப்ராஹிமை கைது செய்துள்ளதால் திமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார்.

ஏற்கனவே திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தற்போது இப்ராஹிம் சிக்கி உள்ளதாக அண்ணாமலை விளாசினார்.

இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் இப்ராஹிம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.

அதில் இப்ராஹிம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டபோதும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.