தனித்து களமிறங்கும் விஜய்; டிட்டோ 1967- ஐ போலவே 2026 தேர்தலும் இருக்கும்?

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டி

Mar 17, 2026 - 16:23
 1
தனித்து களமிறங்கும் விஜய்; டிட்டோ 1967- ஐ போலவே 2026 தேர்தலும் இருக்கும்?

தனித்து களமிறங்கும் விஜய்; டிட்டோ 1967- ஐ போலவே 2026 தேர்தலும் இருக்கும்?   

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய தலைவர்கள் சென்னையில் களமிறங்குகின்றனர்.  பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, ஆர்.கே.நகரில் மரிய வில்சன், மரிலாப்பூரில் வெங்கட்ராமன், ஆயிரம் விளக்கில் ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

பாரம்பரியமாக ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கும், புதிய அரசியல் சக்திகளுக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என கருத்து பேசப்படுகிறது.

தமிழக அரசியலில் இந்த முறை நான்குமுனை போட்டி உறுதியாகி உள்ளது. வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் கடும் போட்டி நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 1967 போல 2026 தேர்தலும் புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.