சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை!

தங்க அங்கி பவனி புறப்படுகிறது

Dec 23, 2025 - 11:48
 5
சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை!

சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை!

சபரிமலையில் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி இன்று ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் கடந்த நவ. 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிச.27ம் தேதி காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை இந்த மண்டல பூஜை நடைபெறவுள்ளது. இந்தத் தங்க அங்கியானது மறைந்த திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியதாக கூறப்படுகிறது. 27ம் தேதி மண்டல பூஜை முடிந்து, அன்று இரவு 10 மணிக்கு ஹரி வராசனம் பாடப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும்.

அதன் பின்னர், மகர விளக்கு கால பூஜைக்காக 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.