மதுரையின் பெயர் காரணம்! Name history of Madurai

Aug 13, 2024 - 23:21
 52
மதுரையின் பெயர் காரணம்! Name history of Madurai

மதுரையின் பெயர் காரணம்! Name history of Madurai

பல ஊர்களின் பெயர்களை கேட்கும் போது அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் மட்டுமே ஞாபகத்தில் வரும். ஆனால் ஒரு சில ஊர்களின் பெயர்களை கேட்கும் போது தான் அதன் வரலாறு அந்த ஊர் மக்களின் வாழ்வியல் என அனைத்தும் நம் கண் முன் தோன்றும். அப்படிப்பட்ட ஊர் தான் மதுரை! 
இது 2600 ஆண்டுகளுக்கு முன்பு வைகை நதியோரம் உருவானதாகும். முப்பெரும் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாகவும் இருந்துள்ளது. மேலும் அங்கு இருக்கக்கூடிய பழமையான கோவில்கள், உணவு வகைகள் என மதுரைக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்றது. இதனால் மதுரை" கோவில் நகரம்" எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் மதுரை மாநகரின் தனி சிறப்பே அந்த நகரின் வடிவமைப்பு தான் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த நகர வடிவமைப்புகளின் பட்டியலில் மதுரை மாநகரம் ஒன்றாகும். இந்த மதுரை மாநகரம் இதற்கு முன்பு மதுராபுரி என்று அழைக்கப்பட்டது. இதற்கு காரணம், தனஞ்செயன் என்னும் ஒரு விவசாயி ஒரு முறை வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடம்ப மரம் ஒன்றின் கீழ் சுயம்புலிங்கம் இருப்பதையும் கடவுளின் கடவுளான இந்திரன் அந்த சுயம்பு லிங்கத்தை வணங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த செய்தியை குணசேகர பாண்டிய மன்னனிடம் சென்று தெரிவித்துள்ளார். பின் குலசேகர பாண்டிய மன்னன் உடனே அந்த பகுதியை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த சுயம்பு லிங்கத்தை மையமாக வைத்து கோவில் கட்டவும், அந்தக் கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் ஆணையிட்டார். அதன் மூலமாக தான் ஒரு நகரம் உருவானது. அந்த நகரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது சிவன் அங்கு தோன்றி தனது தலை முடியில் இருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவினார். இதனை அடுத்து அந்த நகரத்திற்கு மதுராபுரி  என பெயர் வைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் அது மதுரை என மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.