மார்கழி மாதத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு கூடும்!
நன்மை தரும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது
மார்கழி மாதத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு கூடும்!
மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாயிலில் அதிகாலை விளக்கேற்றி வழிபடுவது அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.
தேவர்களின் அதிகாலை பொழுதாக விளங்கும் இம்மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வீட்டில் சுபீட்சத்தைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட ஆன்மிக விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
விளக்கை ஏற்றும்போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.
இப்பொருட்களை உபயோகிக்கும்போது மட்டும்தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளி வட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளி வட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும், நமக்கு நன்மை தரும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
தேவர்களுக்கு விடியல் நேரம் மார்கழி என்பதால் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து மார்கழி காற்றை சுவாசிப்பதால் உடல் நலத்திற்கும் மனதிற்கும் பலத்தை ஏற்படுத்துகிறது.
பெண்கள் வாசலில் கோலமிடுவது வழக்கம், இதனால் சிந்தனை திறன் மற்றும் மனதை கட்டுப்படுத்துவது போன்ற நல்ல சிந்தனை ஏற்படுகிறது. தொடர்ந்து தேவர்களுக்கு உகந்த நேரம் என்பதால் விளக்கை ஏற்றி அதிகாலையில் வழிபட்டால் தேவர்களுக்கே அந்த வேண்டுதல் கேட்கும் என்றும் நம் எண்ணம் விரைவில் நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது.
