நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி! Actress Kasthuri Issue

Nov 14, 2024 - 17:21
 2
நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி! Actress Kasthuri Issue

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி! Actress Kasthuri Issue

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்த வழக்கில், அவருடைய முன் ஜாமினை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய,  தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி,  தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதனால், அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். தற்பொழுது அந்த முன்ஜாமின் மனுவை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்துள்ளார்.