ஸ்டாலினுக்கு சவால் விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.,அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது?

Dec 26, 2024 - 15:03
Dec 26, 2024 - 15:11
 5
ஸ்டாலினுக்கு சவால் விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஸ்டாலினுக்கு சவால் விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

அம்பேத்கர் மீது தி.மு.க.,வுக்கு மரியாதை இருந்தால் அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு தி.மு.க., அரசு தயாரா? என ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைவழிகாட்டி. இந்தியாவிலேயே பட்டியலினத்தவர் அல்லாதவரால் தொடங்கப் பட்ட கட்சிக்கு அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.

அவர் மீது கொண்ட மதிப்பால் எங்கள் வீட்டு வளாகம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிலைகளை திறந்திருக்கிறோம்.

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன். ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.,அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது?

இன்று வரை தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படவில்லை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 40க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத அவரது தாயார் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த புதிய திட்டத்திற்கும், கட்டிடங்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படவில்லை.

இது தான் அண்ணலுக்கு செலுத்தும் மரியாதையா? என தி.மு.க., அரசு விளக்க வேண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.