விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – நாசா விளக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்

Dec 26, 2024 - 14:21
Dec 26, 2024 - 14:56
 5
விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – நாசா விளக்கம்

விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – நாசா விளக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்த கேள்விக்கு, நாசா விளக்களித்துள்ளது.

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். அவர்கள் அடுத்த ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா அமைப்பு சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. இதனை பார்த்த, நெட்டிசன்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தனர். 

கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை நீண்ட நாட்களுக்கு முன்னரே கொண்டு வந்து விட்டீர்களா?

8 நாட்கள் மட்டுமே விண்வெளி பயணம் என சொன்னவர்களிடம் எப்படி தொப்பிகள் வந்தன?

கிறிஸ்துமஸ் தொப்பிகள், அலங்காரங்களை யார் விநியோகம் செய்தது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதனையடுத்து நாசா அமைப்பானது வீடியோ குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டது. 

அதில், சர்வதேச விண்வெளி நிலையம் ஆண்டுதோறும் பல்வேறு பொருட்களால் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வாயிலாக, கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறி உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுப் பொருட்களும், சில அறிவியல் பணிகளுக்கான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன என நாசா விளக்களித்துள்ளது.