திமுக கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆளுநருக்கு கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமித்த ஆளுநரை கண்டிக்கின்றோம்

Jan 7, 2025 - 12:05
Jan 7, 2025 - 13:25
 7
திமுக கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆளுநருக்கு கண்டனம்

திமுக கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆளுநருக்கு கண்டனம்

 

திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,

மாளிகையில் வாழ்ந்து வரும் ஆளுநருக்கு நமது போராட்டம் தெரிய வேண்டும். கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படும் போதே வெளியேறினார். அது கிரிமினல் குற்றம். ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்த்து வயிற்றெரிச்சலில் ஆளுநர் பேசுகிறார். ‘சட்டமன்ற மரபுகளை அவமதித்த ஆளுநரை கண்டிக்கிறோம்.


தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமித்த ஆளுநரை கண்டிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பேசுகையில், “சென்னை மாவட்டத்தின் சார்பாக அனைத்து சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி என அனைவரும் இங்கு சிறப்பாக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுளோம்.

இந்த ஆளுநர் தேவை இல்லை. மத்திய அரசின் அறிக்கையை குடியரசு தலைவர் வாசிப்பார். அவரால் ஒரு புள்ளி கூட அதில் மாற்ற முடியாது. ஆனால் ஆளுநர் அப்படி இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.