டிவிஷன் முறை வாக்கெடுப்பு முடிவுகள்…அவையில் பரபரப்பு - சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி!
63 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்

டிவிஷன் முறை வாக்கெடுப்பு முடிவுகள்…அவையில் பரபரப்பு - சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானமானத்தில் டிவிஷன் முறை வாக்கெடுப்பு பகுதி 1-ல் தீர்மானத்திற்கும், பகுதி 2 தீர்மானத்திற்கும் ஆதரவாக யாரும் வாக்களிக்கவில்லை.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 6 டிவிஷனாக பிரிக்கப்பட்டு டிவிஷன் முறையில் நடைபெற்று வருகிறது
முதல் வாக்கெடுப்பான குரல் வாக்கெடுப்பிலும் அதிமுக தோல்வியை தழுவியது.
118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 63 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு எதிராக 154 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் யாரும் நடுநிலை வகிக்கவில்லை அதிமுகவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.