இது பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான் – சீமான்
பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான் - சீமான்
இது பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான் – சீமான்
பெரியாரை எங்களை விட அதிகமாக எதிர்த்து பேசியது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் தான் - சீமான்
“திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். பெரியார் மண், பெரியார் மண் என்று யாரும் பேச வேண்டாம். எங்களுக்கு பெரியாரே மண்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்பு போரை நடத்தியது பெரியார் என பேசுகிற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வரலாற்றை தலையில் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டுதான் போக வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான்.
பிரபாகரன் ஒரு தீவிரவாதி.. பயங்கரவாதி.. தனித் தமிழீழம் தீர்வு அல்ல என்று சொல்கிற கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கையில் தமிழினத்தை அழித்தது காங்கிரஸ், துணை நின்றது திமுக. அப்போது ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. உலகத் தமிழினம் நெடுமாறனைத்தான் மன்னிக்காது. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. இப்போதுதான் பேசினேன்.. மகள் துவாரகா வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்ன நெடுமாறனை உலகத் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனக்கு எந்த பதற்றமும் இல்லை.. எல்லோரும்தான் என்னை பார்த்து பதற்றம் அடைகிறார்கள்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நிறுத்தி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தது பிராமண பெண்தான். பெரியார் செய்த சமூக சீர்திருத்தத்தை, பெண்ணிய உரிமையை, சாதிய ஒழிப்பை, சமூக நீதியை, ஒரே ஒரு முறை மேடைபோட்டு, பட்டியலிட்டு பேசுங்கள்.
ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகர்த்து, புதிய ஒரு கோட்பாட்டை கட்டமைப்பை கட்டமைக்க நினைக்கும் போது அதை ஏற்பார்கள், எதிர்ப்பார்கள் ஆதரிப்பார்கள், அருவருப்பார்கள், விமர்சிப்பார்கள் என்றெல்லாம் அச்சப்படக் கூடாது. அதை துணிந்து செய்கிறவனுக்குத்தான் ஒரு போர் வீரனுக்கு உள்ள துணிவும் வீரமும் தேவைப்படுகிறது. அப்படி நின்றவன்தான் உலகெங்கிலும் உள்ள மாறுதல்களை கொண்டு வந்திருக்கின்றான். இதான் வரலாறு.