புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்! Pudukkottai

Sep 20, 2024 - 01:15
 4
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்! Pudukkottai

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்! 

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆதிதிராவிடர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

அனைத்து குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம்  வருடம் மார்ச் மாதம் பட்டா வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தனர் ஆனால் ஒரு வருட காலமாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தாமதப்படுத்தி வந்தனர் அதனைத் தொடர்ந்து

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு தீத்தானிப்பட்டி ஆதிதிராவிடர் 35 நபர்கள் பட்டா வழங்க கோரி தனி வட்டாட்சியரை சந்திக்க வந்தனர் ஆனால் முறையான பதில் இல்லாததால் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தலைமையில் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் எங்களுக்கு முறையான பதில் அளிக்க வேண்டும் பட்டா உடனடியாக வழங்க வேண்டும் இல்லையெனில் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்