தவெகவை கண்டு திமுகவுக்கு பயம் - விஜய் அறிக்கை
செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளுங்கட்சி

தவெகவை கண்டு திமுகவுக்கு பயம் - விஜய் அறிக்கை
தவெகவை கண்டு திமுக அச்சப்படுகிறது என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததை சுட்டிக்காட்டி பதிவு.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளுங்கட்சி யாருக்கு பயப்படுகிறதோ இல்லையோ தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது.
தேர்தல் பிரச்சார பயணம் என்பது அனைத்து கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயக பூர்வமான பிரதான நடவடிக்கை தான்.
மற்ற கட்சிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக தவெகவின் செயல்பாடுகளை கண்டு அஞ்சுகிறது.
காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.
திமுக அரசின் வழக்குப்பதிவு நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன் என விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.