Singer Kalpana Raghavendar Hospitalised | பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! காரணம் என்ன?
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Singer Kalpana Raghavendar Hospitalised | பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! காரணம் என்ன?
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி பிரபலமானவர் கல்பனா. இவர் கடந்த சில வருடங்களாக ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அக்கம் பக்கத்தினர் அவரின் வீட்டை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் அங்கு எந்த சத்தமும் இல்லாததால், அவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், கல்பனாவின் கணவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்துள்ளார். அதனால் அவருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்பனாவின் உறவினர்களும் கல்பனாவிற்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் பயந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கல்பனா வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கல்பனா வீட்டிற்குள் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனே, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கல்பனாவின் கணவரும் ஹைதராபாத்திற்கு வந்து கல்பனாவை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி பாடகர்கள் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சுனிதா அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளனர். தற்போது கல்பனா சுயநினைவுக்கு வந்ததாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டியதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? என்பதை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.