சேனல்களுக்கு வக்கீல் நோட்டீஸ்! மீண்டும் சர்ச்சை கிளப்பிய சுசித்ரா!

May 18, 2024 - 23:25
 14
சேனல்களுக்கு வக்கீல் நோட்டீஸ்! மீண்டும் சர்ச்சை கிளப்பிய சுசித்ரா!

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் பாடகி சுசித்ராவின் பேட்டிகள் தான் வைரலாகி வருகிறது. இவரது நேர்கானலில் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்றும் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை சம்பவம் குறித்து பேச தொடங்கிய இவர் அதனை தொடர்ந்து, தனுசிடமிருந்து தொடங்கி தமிழ் சினிமாவில் என்னவெல்லாம் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை விரிவாக பேசிவிட்டார். இதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுசித்ராவின் நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. முன்னனி நடிகைகள், நடிகர்கள் குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாடகி சுசித்ரா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. சுசித்ராவின் போலியான கருத்துக்களை முன்வைத்து பிரபலங்களை தரக்குறைவாக பேசி வெளியாகிருந்த வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டுமென சுசித்ராவின் முன்னாள் கனவருமான நடிகர் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது மற்றொரு அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்னும் ட்விட்டர் பதிவின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் புரட்டி போட்டார் பாடகி சுசித்ரா. ஆனால் தற்போது அந்த ட்விட்டர் பதிவு எதுவும் நான் போட்டது இல்லை என மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.