பசங்க படத்தின் நடிகர் ஸ்ரீராம் பிரபல கம்பெனியின் CEO ஆ ????
இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இந்த படம் 2009 வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

பசங்க படத்தின் நடிகர் ஸ்ரீராம் பிரபல கம்பெனியின் CEO ஆ ????
இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இந்த படம் 2009 வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
பசங்க படத்தில் நடித்த ஜீவாவா இது..
இப்படத்தில் விமல் , கிஷோர் என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல் படத்திற்கு அழகே இதில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தான். அதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஸ்ரீராம். இவருக்கு இப்படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல படங்களில் ஸ்ரீராம் நடித்து வந்தார்.
மேலும் சினிமாவில் நடிப்பவர்கள் நடிப்பை தாண்டி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பலவிதமான தொழில்களையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தான் சினிமாவில் நடிகராக இருக்கும் ஸ்ரீராம் நடிப்பை தாண்டி, பூமியை பாதுகாக்கும் வகையில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார்.
அதாவது கார்பன் வெளியீடு அதிகரிப்பதன் மூலமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. அதனால் பல நாட்டு அரசர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காக AATREL என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் தான் உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஒரே இலக்கு 2050 ம் ஆண்டிற்குள் உலக அளவில் கார்பன் வெளியீட்டை குறைத்து புவியை காப்பது தான். இப்படிப்பட்ட நிறுவனத்தில் தான் ஸ்ரீராம் CEO ஆக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஸ்ரீராமை பாராட்டி வருகிறார்கள்.