INDIA துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு !

NDA V/S INDIA

Aug 19, 2025 - 17:10
 2
INDIA துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு !

INDIA துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

 

துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகிக்கிறார்.

சுதர்சன் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நீதிபதியாகப் பணியாற்றியவர்.  

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது.  

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது.