அதிமுகவின் உண்மையான தொண்டன் செங்கோட்டையன் - சசிகலா

அதிமுக ரத்தம் என்பதை நிரூபித்துவிட்டார்

Sep 5, 2025 - 16:44
 53
அதிமுகவின் உண்மையான தொண்டன் செங்கோட்டையன் - சசிகலா

அதிமுகவின் உண்மையான தொண்டன் செங்கோட்டையன் - சசிகலா

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் ஒரு உண்மையான அதிமுக தொண்டர் என்பதை நிரூபித்துவிட்டார்  சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை நிரூபித்துவிட்டார் செங்கோட்டையன் எனவும், பிளவுப்பட்ட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தொண்டனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறப்போம் மன்னிப்போம் என்ற பெயரில் வெளியில் சென்றவர்களை அரவணைக்க வேண்டுமென்ற செங்கோட்டையனின் கருத்திற்கு சசிகலா ஆதரவு தெரிவித்துள்ளார்.    

அதிமுக எந்த சக்திகளாலும் அழிக்க முடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக முன்னோடியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் நிரூபித்துவிட்டார்.

பல்வேறு நெருக்கடியான கால கட்டங்களிலும் செங்கோட்டையன் உடன் இருந்திருக்கிறார்.  

செங்கோட்டையனின் கருத்து தான் அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது.

யார் தடுத்தாலும் மீண்டும் அதிமுக அதே மிடுக்கோடும் செருக்கோடும் ஒளிரும் என சசிகலா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது போன்ற அதிமுகவின் உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவின் எந்த தீய எண்ணங்களும் ஈடேறாது என சசிகலா தெரிவித்துள்ளார்.