ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் சட்டையை கிழித்து தாக்குதல்!

விசிகவினர் அராஜகம் செய்ய கூடாது.

Sep 6, 2025 - 17:34
 41
ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் சட்டையை கிழித்து தாக்குதல்!

 ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் சட்டையை கிழித்து தாக்குதல்!

4 பேர் கொண்ட ஒரு கும்பல் டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தியை சட்டையை கிழித்து தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் என் மீது தாக்குதல் நடத்தினார்கள் இதை திருமாவளவன் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பெசண்ட் நகருக்கு தனியாகத்தான் வருகிறார் நான் நினைத்தால் அழைத்து பேசலாம். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என 2 முறை காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்.

பலமுறை காவல்துறையில் நான் புகார் அளித்தும் இதுவரை எனக்கு அறிவுரை மட்டுமே வழங்கி வருகிறது எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.  

குழுவாக இணைந்து என்ன தாக்க நினைத்தது ஒரு அராஜக போக்கு இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க வேண்டுமே தவிர அராஜகம் செய்ய கூடாது.  

காவல்துறையின் ஒத்துழைப்போடு அனைத்து கூலிப்படைகளும் இயங்கின்றன இதற்கான நடவடிக்கை எப்போதுமே எடுக்கப்படாது.  

நியாயத்தை கேட்டால் ஆத்திரத்தில் கூலிப்படைகளை வைத்து தாக்குதல் நடத்துவது தான் அவர்களுடைய அரசியல் என ஏர்போர்ட் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.