மக்களவையில் நடந்தது என்ன? அமைச்சர் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம் !

தமிழக எம்.பிக்களை அநாகரீகமானவர்கள் என பிரதான் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

Mar 10, 2025 - 15:53
 1
மக்களவையில் நடந்தது என்ன? அமைச்சர் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம் !

மக்களவையில் நடந்தது என்ன?

அமைச்சர் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

மக்களவையில் நடந்த சர்ச்சை குறித்தும், அமைச்சரின் பேச்சு குறித்தும் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

நாங்கள் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கிரோம் என கூறவில்லை பிரதான் பொய் கூறுகிறார்.

தமிழக எம்.பிக்களை அநாகரீகமானவர்கள் என பிரதான் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், நியாயமாக எதிர்கட்சிகளின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் அமைச்சருக்கு மட்டுமே அனுமதி அளிப்பது முற்றிலும் வருந்தத்தக்க ஒன்று. கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய ஒன்று இரண்டிற்கும் எதிராக அமைச்சர் செயல்படுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 

தமிழக அரசு, தமிழக எம்.பிக்களை நகரீகமற்றோர் என பேசிவிட்டு திரும்ப பெற்றார் மத்திய அமைச்சர் பிரதான். தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் எந்த ஆராய்ச்சிகளையும் தெரிந்து புரிந்து கொள்ளாமல் ஒரு கருத்தை முன்வைப்பது தேவையற்ற ஒன்று.

அதே போல், மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அதை திசை திருப்பும் வகையில் சமஸ்கிருதம் பழமையானதா இல்லை தமிழ் பழமையானதா என்ற விவாதமே தேவையற்றது தான் என கனிமொழி தெரிவித்துள்ளார்.