எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது தெறிக்கவிட்ட சி.வி சண்முகம்

எவர் போனாலும் அதிமுக இயங்கும்

Dec 10, 2025 - 16:09
Dec 10, 2025 - 16:11
 1
எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது தெறிக்கவிட்ட சி.வி சண்முகம்

எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது; தெறிக்கவிட்ட சி.வி சண்முகம்!

இன்று ஆண்டு கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக அரசுக்கு சங்கு ஊதும் ஒரு பொதுக்குழு தான் இந்த அதிமுக கூட்டம் என ஆவேசமாக பேசியுள்ளார் சி.வி. சண்முகம்

அதிமுக இருக்குமா, இருக்காதா இரண்டாக போய்விட்டது, மூன்றாக போய்விட்டது என தேவையிலாமல் விமர்சிக்கிறார்கள்.  அவர் போய் விட்டார், இவர் போய்விட்டார் அதிமுக இயங்காது என பொய்யான அவதூறுகள் பறவுகிறது எவர் போனாலும் அதிமுக இயங்கும்.

திமுக, அதிமுக மீது வெறும் கட்டுக்கதைகளை அடுக்கி வருகிறது திமுகவுக்கு நிறைய ஊடங்கள் விலை போய்விட்டது.

எடப்பாடி ஆட்சி செய்ய முடியுமா? ஆட்சி பற்றி தெரியுமா என கேட்டவர்களுக்கு மத்தியில் 4 ½ ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பதிலாக கொடுத்தார் ஈபிஎஸ்.

ஏழை மக்களின் மனநிலையையும், விவசாயிகளின் நிலையையும் அனைத்து மக்களையும் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் அதிமுகவை அழிக்க வேண்டுமென்றே கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எதிரிகள், தூரோகிகள் மட்டுமல்ல நம்மோடு உறவாடிக் கொண்டும் அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். துரோகிகளை இனம் கண்டு கொள்ள வேண்டும் அப்போது தான் சூழ்ச்சி வலையில் சிக்காமல் இருக்க முடியும்.

அதிமுக என்ற கழகத்தை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற நிலைக்கு அதிமுகவை ஈபிஎஸ் கொண்டு வந்துள்ளார் என ஆவேசமாக பேசியுள்ளார்.