இந்தியாவுக்கே ஷாக் கொடுத்த ட்ரம்ப்….ஒற்றை கையெழுத்தால் பரபரப்பு…!
ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்
இந்தியாவுக்கே ஷாக் கொடுத்த ட்ரம்ப்….ஒற்றை கையெழுத்தால் பரபரப்பு…!
குடியுரிமை விவகாரத்தில் ட்ரம்ப்பின் நடவடிக்கை இந்தியர்களை பாதிக்கும் என பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், இந்த உத்தரவு இந்திய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையில் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர் அதாவது, கிரீன் கார்டு வைத்திருப்பவர் குழந்தைக்கு மட்டுமே குடியுரிமை என உத்தாவு கூறுகிறது.
இது அமெரிக்காவில் குடியேரும் இந்தியர்கள் நலனை வெகுவாக பாதிக்கப்படும் என்றே பார்க்கப்படுகிறது.
2024 நிலவரப்படி அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 54 லட்சம் ஆகும்.
அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 1.47சதவீதம்.
இவர்களில் ஏரத்தாழ 3ல் 2 பங்கு அதாவது 34 சதவீதம் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
தற்போது ட்ரம்ப் உத்தரவு கொள்கையாக மாறினால் அமெரிக்காவில் எச்.1பி விசா போன்ற தற்காலிக வேலை விசாவில் வசிக்கும் இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது.
அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவில் செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையை பெறுவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமையை பெறாவிட்டால் 21 வயதுக்கு பிறகு இளைஞர் தனது பெற்றோரை அமெரிக்காவிற்கு அழைத்து வர முடியாது.
இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குடியேரிய இந்தியர்களுக்கு பிறக்கும் நூற்றாயிரக்கணக்கான குழந்தைகளை பாதிக்கவே செய்யும்.
ஆனால் உத்தரவு அமலாக அரசியலமைப்பு விதி திருத்தப்பட வேண்டும் என்பதால் ட்ரம்பிற்கு சவாலாகவே இருக்கும்.
அதாவது, அமெரிக்க அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கு அதிலும், அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு அவசியமானது.