நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் திமுக – தமிழிசை சவுந்தரராஜன்
மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்
நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் திமுக – தமிழிசை சவுந்தரராஜன்
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கொடுத்த கடிதம் தொடர்பாக பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
நாடு முழுவதும் திமுக விஷம் பரப்புகிறது. அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு சமூக பாதுகாப்பை சீர்குலைப்பதாக உள்ளதாக விமர்சனம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வெளியிட்டு வரும் நீதிபதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து நோட்டீஸ் கொடுத்தனர்.
100 மக்களவை உறுப்பினர்கள், 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன்படி எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்று எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, ஜோதிமணி, சு. வெங்கடேசன், ஆ. ராசா உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கொடுத்தனர்.
திமுகவின் இந்த பதவிநீக்க மசோதா நீதித்துறையை அச்சுறுத்தும் செயல்.
