அண்ணாமலையின் முடிவால் அதிர்ந்து போன அரசியல் களம்!
பொறுப்புகளில் இருந்து விலகுகிறார்
அண்ணாமலையின் முடிவால் அதிர்ந்து போன அரசியல் களம்!
2026 சட்டமன்ற தேர்தலில் தந்தையின் உடல் நிலை காரணமாக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜகவில் அமைக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர். 6 தொகுதிகளுக்கு அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்திருந்த நிலையில், கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று பிப்.3 கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,“சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து யோசிக்க வேண்டும். எனது தந்தையின் உடல்நிலை குறித்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அடிப்படை வேலைகள் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளேன்.
நான் இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். இப்போதைக்கு அதிகம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் கட்சிக்கு, கூட்டணி கட்சிகளுக்கு, போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என கட்சி சொல்லும் வேலையை செய்வோம். சம்பந்தப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை கட்சி சொன்ன பிறகு பேசுகிறேன்.
சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சித் தலைமை நியமிக்கும்.தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கான காலமும் சூழ்நிலையும் நிறைய உள்ளது. கட்சி என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு உங்களிடம் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
