அனைத்து நாடுகளிலும் இந்தியாவே வேகமாக உள்ளது!

பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது

Dec 7, 2024 - 16:47
Dec 9, 2024 - 11:17
 2
அனைத்து நாடுகளிலும் இந்தியாவே வேகமாக உள்ளது!

அனைத்து நாடுகளிலும் இந்தியாவே வேகமாக உள்ளது!

நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 5.4%ஆக குறைந்து இருப்பது பொருளாதார மந்தநிலையாக கருதக்கூடாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 3வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (Q2FY25) வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் 5.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான 6.7% வளர்ச்சியிலிருந்தும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான 8.1% வளர்ச்சியிலிருந்தும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

இந்த நிதியாண்டில் நிதி வளர்ச்சி 6.2 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையில், அது 5.4 சதவீதமாகக் குறைந்தது.

அதேநேரத்தில், கடந்த ஏழு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் இம்முறை மிகக் குறைவாக இருந்தாலும், அனைத்து நாடுகளிலும் இதுவே மிக வேகமாக உள்ளது. இதே காலாண்டில், சீனாவின் 4.6% வளர்ச்சியை விஞ்சி, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.