வெளுத்து வாங்க போகும் கனமழை... மக்களே உஷார்!
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது
வெளுத்து வாங்க போகும் கனமழை..... மக்களே உஷார்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது அடுத்த வாரத்தில் இருந்து கனமழை பெய்யக்கூடும். வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மியான்மர், வங்கதேசம் கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வாக வலு குறைந்துவிட்டது.
அடுத்த 24 மணி நெரத்தில் காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவிழக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் பகுதி மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு வாரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய கூடும் எனவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.
சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், திருச்சி மற்றும் காரைக்காலிலும், வரும் 7ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், 8ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
