மக்கள் கவனத்திற்கு; தமிழ்நாட்டிற்கு வெப்பநிலை எச்சரிக்கை…. முக்கிய அறிவிப்பு!

Mar 18, 2026 - 15:36
 3
மக்கள் கவனத்திற்கு; தமிழ்நாட்டிற்கு வெப்பநிலை எச்சரிக்கை…. முக்கிய அறிவிப்பு!

மக்கள் கவனத்திற்கு; தமிழ்நாட்டிற்கு வெப்பநிலை எச்சரிக்கை…. முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை 38°C முதல் 41°C வரை உயர்ந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அடுத்த 4–5 நாட்கள் தமிழ்நாட்டில் வெப்பஅலை நிலை தொடரும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பகல் நேரங்களில் வெளியில் செல்வது ஆபத்தானதாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனவே,

நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும், Heat Stroke அபாயம், விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு மக்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்
  • மதியம் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே போகாமல் இருக்க வேண்டும்
  • லைட் கலர் உடைகள் அணிய வேண்டும்
  • ORS / எலுமிச்சை நீர் போன்றவை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • தலைசுற்றல், வாந்தி, உடல் சோர்வு இருந்தால் உடனே ஓய்வு எடுத்து, தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்நிலை மோசமாக உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.