மாதவிடாயை சீராக்கும் 10 உணவுகள் | 10 Essential Foods for Menstrual Health and Regularity
மாதவிடாயை சீராக்கும் 10 உணவுகள்
இயற்கையாக நடைபெறும் மாதவிடாய்க்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம்
1.எள் (கருப்பு எள் சிறப்பு)
கருப்பு எள் அத்தியாவசிய ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சிறந்த உணவு ஆகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை வலிமையாக்கி, மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது.
2. இஞ்சி
மாதவிடாய் காலத்தில் இஞ்சி ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, பிடிப்புகள், குமட்டல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க இஞ்சி சிறந்த இயற்கை மருந்தாகும்.
3.பாப்பாளி
இது கருப்பை சுருக்கங்களைத் தூண்டி, இரத்த ஓட்டத்தை சீராக்கி, மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் PCOD/PCOS பிரச்சனை உள்ளவர்களுக்கு பப்பாளி சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
4.கீரை வகைகள்
மெக்னீசியம் நிறைந்த முருங்கைக் கீரை, பசலைக்கீரை உள்ளிட்ட கீரைகள் ரத்த இழப்பை ஈடுகட்டி, அயற்சி, மயக்கம் மற்றும் உடல் வலியை குறைத்து, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
5. வாழைப்பழம்
மாதவிடாய் காலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் அடிவயிற்று வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி, சோர்வை நீக்கி ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கிறது.
