நீங்க மீன் பிரியரா?... இல்லைனாலும் இத தெரிஞ்சிக்கோங்க; புற்றுநோய், இதய கோளாரு, தைராய்டு, முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு!

வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது

Oct 14, 2025 - 16:54
Oct 14, 2025 - 17:06
 23
நீங்க மீன் பிரியரா?... இல்லைனாலும் இத தெரிஞ்சிக்கோங்க; புற்றுநோய், இதய கோளாரு, தைராய்டு, முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு!
நீங்க மீன் பிரியரா?... இல்லைனாலும் இத தெரிஞ்சிக்கோங்க; புற்றுநோய், இதய கோளாரு, தைராய்டு, முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு!

நீங்க மீன் பிரியரா?... இல்லைனாலும் இத தெரிஞ்சிக்கோங்க; புற்றுநோய், இதய கோளாரு, தைராய்டு, முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு! 

வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி5 ஆகியவை அடங்கிய மிகவும் பயன் தரும் மீன்களில் முக்கியமான ஒன்று சால்மன் மீன்கள்

ஆரோக்கியமான துடிப்பான வாழ்க்கையை வாழ சால்மன் மீன் மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்த மீன்களில் உள்ள வைட்டமின்கள் நமது உடலில் நடைபெறும் முக்கிய செயல்முறைகள் பலவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன.

நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுவது, இனக்கீற்று அமில மரபணுக்களை உருவாக்க மற்றும் (DNA genes) அதில் ஏற்படும் பழுதை சரி செய்வது மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தக்கூடிய வீக்கங்களை குறைப்பது என பல்வேறு முக்கிய ஆற்றலை கொண்டது.

சமீபத்திய ஆராய்ச்சியை பொறுத்தவரை மூளை மற்றும் நரம்பு மண்டலம் தனது பணியை சிறப்பாக புரிய எல்லா வகையான வைட்டமின்களும் தேவை என்கிறது.

சால்மன் மீன்களில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. இவை எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

மேலும் தண்டுவட நோய் (multiple sclerosis) மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் அதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கிறது.

சால்மனில் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன.

பண்ணையில் வளர்க்கப்படாத சால்மன் மீன்களில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது.

பழங்களை பொறுத்தவரை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது. ஆனால் சால்மன் மீன்களில் வாழைப்பழத்தில் உள்ள அளவை விட 10% கூடுதலாக பொட்டாசியம் இருக்கிறது.

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதுவும் இந்தியா போன்ற நாட்டில் உணவில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் நமது உடலில் உபரி நீர் சேராமல் பொட்டாசியம் தடுக்கிறது.

பாஸ்பரஸும் பல நன்மைகளை புரிகிறது. எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க, இதயம் மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்க இவை துணை புரிகிறது.

சால்மனில் உள்ள மற்றொரு தாது செலினியம் ஆகும். அது இதய நோய்கள், தைராய்டு நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுத்து உதவுகிறது.

தாதுக்களை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உருவாகும்.