தவறான பயணத்தை முடித்தே ஆக வேண்டிய அவசியமில்லை; எந்த விளக்கமும் கொடுக்க தேவையுமில்லை உங்களை பற்றி யோசியுங்கள் – ஹன்சிகா
நீங்கள் உங்களை மதிக்க வேண்டும்
தவறான பயணத்தை முடித்தே ஆக வேண்டிய அவசியமில்லை; எந்த விளக்கமும் கொடுக்க தேவையுமில்லை உங்களை பற்றி யோசியுங்கள் – ஹன்சிகா
நீங்கள் தவறான ரயிலில் ஏறினால், அப்பயணத்தை முடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை என நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
எந்த ஒரு உறவிலும் நம்மை நாம் இழக்கவே கூடாது. முதலில் நீங்கள் உங்களை மதிக்க வேண்டும், அப்போதுதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்.
என்னுடைய குடும்பம் எதற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பற்றி பல விஷயங்களை எழுதினார்கள் ஆனால் அதை பற்றி நான் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நீங்கள் தவறான ரயிலில் ஏறினால், அப்பயணத்தை முடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை அதிலிருந்து இறங்க வேண்டும்.
நான் மிகவும் மகிழ்ச்சியான நபர் ஆனால் நானே ஒரு டார்க் ஸ்பேஸ் உள்ளே செல்வதை கவனித்தார்கள்.
அவர்கள் எதுவாக இருந்தாலும் அது உன் முடிவு என்றார்கள்.
பின்னாளில் ஒரு காதல் என்னை தேடி வரலாம். ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை. நேரம் வரும் போது, இந்த பிரபஞ்சம் சரியானதை நோக்கி என்னை அழைத்து செல்லும்.
