கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்த ஒபாமா!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக யார் தேர்வாக போகிறார் என்பது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இதற்கெல்லாம் ஒரு விடையாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானோர் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசும்பொருளானது.
அதே நேரம், பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று, “அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை. கமலா ஹாரிஸ் இந்தப் போட்டியில் வெல்ல முடியாது. இதனால் ஒபாமா அதிர்ப்தியில் இருக்கிறார் என சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது ஒபாமா மற்றும் அவரின் மனைவி மிட்சேல் ஒபாமா இருவரும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஹாரிசை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் வீடியோவையும் ஹாரிஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்லார். அந்த வீடியோவில், இந்த வார தொடக்கத்தில் மிட்சேலும் நானும் எங்கள் தோழி கமலா ஹாரிசை அழைத்து எங்கள் ஆதரவினை தெரிவித்தோம்.
கமலா அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என நாங்கள் நினைக்கிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு. அமெரிக்கா இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த நிலையில் கமலா வெற்றி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
அதோடு கமலா ஹாரிஸுக்கு அதிகமான வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படலாம் என ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.