குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிப்பீர்கள்?

May 18, 2024 - 02:06
Sep 9, 2024 - 23:46
 9
குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிப்பீர்கள்?

ஆம் ஆத்மி மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன், சுவாதி மாலிவால் விவகாரம் என பாஜக விமர்சித்து வருகிறது. இதில் அமித்ஷாவுக்கு கெஜ்ரிவாலுக்குமான வார்த்தை போரும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது, விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.