ப்ளஸ்-2 தேர்வில் தமிழகம் சாதனை!

May 6, 2024 - 16:28
 0  0
ப்ளஸ்-2 தேர்வில் தமிழகம் சாதனை!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக அரசு தேர்வு இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 94. 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 396 அரசுப் பள்ளிகள் உட்பட 2,478 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் திருப்பூர் மாவட்டம் முதலிடமும், சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடமும், திருவண்ணாமலை மாவட்டம் 3ம் இடமும் பிடித்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow