பாஜகவை எதிர்த்து வெற்றி பெற முடியாது!

May 4, 2024 - 23:17
 3
பாஜகவை எதிர்த்து வெற்றி பெற முடியாது!

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த தேர்தலில் அமேதியில் தோல்வி அடைந்த ராகுல் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

இப்போது வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே தான் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார். ராகுலுக்கு தேர்தலில் போட்டியிடுவதிலும், சீட் கிடைப்பதிலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ராகுல் ரேபரேலி தொகுதியில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைவார். பாஜக இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர். சுகாதாரம், கல்வி போன்ற பணிகளை நரேந்திர மோடி செய்துள்ளார் எனவும், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி எங்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறப் போவதில்லை என பேசியுள்ளார்.