திமுகவின் உருட்டு!

Apr 27, 2024 - 02:16
 7
திமுகவின் உருட்டு!

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் என்பதுக்கு பொறுத்தமாக இருக்கிறது திமுகவின் செயல்.

சமீபத்தில் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நடத்துனர் இருக்கை தனியாக பெயர்ந்து விழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையி இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சிவசங்கர், பேருந்து இருக்கையை நடத்துனர் சரிசெய்ய முயன்றபோது இருக்கை கழன்று விழுந்துள்ளது. இது கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக கவனிக்கப்படவில்லை. அதிமுக புதிய பேருந்துகளை வாங்கததால் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன என தெரிவித்துள்ளார்.

அதோடு, புதிதாக 7 ஆயிரம் பேருந்துகள் வாங்குவத்ற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 350 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், இனி இது போன்ற பிரச்சனைகள் நடக்காது என தெரிவித்துள்ளார்.