சவுக்கு சங்கர் அதிரடி கைது !

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கைது செய்துள்ளனர்

May 4, 2024 - 21:31
 14
சவுக்கு சங்கர் அதிரடி கைது !

சவுக்கு சங்கர் அதிரடி கைது !

சவுக்கு மீடியா என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் தான் சவுக்கு சங்கர். இவர் தொடக்கத்தில் பல youtube சேனலில் அவருடைய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். பின் இவருக்கென பல ரசிகர்கள் உருவானதால் தனக்கென ஒரு youtube சேனலை உருவாக்கினார். இவர் தொடர்ந்து அரசை விமர்சிக்கும் வகையில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் முதல்வரை சந்தித்து பேசியதாக அவர் வெளியிட்ட வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கைது செய்துள்ளனர். பின், கைது செய்த அவரை கோவையில் உள்ள மாநகர காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ள போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.