மீண்டும் இணையும் ’ஜோ’ பட கூட்டணி!

May 4, 2024 - 19:17
 3
மீண்டும் இணையும் ’ஜோ’ பட கூட்டணி!

அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்துல ரியோ ராஜ் மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா உள்ளிட்டோர் நடிச்சி ரசிகர்கள் பெரிய அளவுல கொண்டாடுன படம் தான் ஜோ. காதலை மையமா வச்சி எடுத்த இந்த படத்துக்கு கிடச்ச வரவேற்ப தொடர்ந்து இதுக்கான திரைகளும் அதிகப்படுத்தப்பட்டுச்சு. இந்த நிலையில இந்த வெற்றிக் கூட்டணி , மீண்டும் இணஞ்சிருக்காங்க. ’ப்ளாக்‌ஷீப்’ யூடியூப் மூலம் பிரபலமான கலையரசன் தங்கவேலோட இயக்கத்துல இந்த கூட்டணி நடிக்க இருக்காங்க. இந்த படத்துல ஆர்.ஜே விக்னேஷ் காந்த், நடிகை ஷீலா முக்கிய கதாபாத்திரத்துல நடிக்குறாங்க. ஜோ படத்தோட இசையமைபாளர் சித்து குமார் இந்த படத்துக்கும் இசையமைக்க இருக்காரு. இந்த படத்துக்கான பூஜை முடிஞ்சிருக்க நிலையில இதுக்கான படப்பிடிப்பு எப்போ தொடங்குறது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகல.